சுஜாதா ஒரு

Share your stories, poems, plays, and show your creative side to the world.

Moderators: eye_of_tiger, shalimar123

Post Reply
User avatar
prasanna
Posts: 4397
Joined: Wed Feb 20, 2008 4:00 pm
Location: DUBAI, Los Angeles, Chennai

சுஜாதா ஒரு

Post by prasanna » Sun Aug 24, 2008 5:28 am

சுஜாதா ஒரு சரித்திரம்


ிலிக்கான் உலகின்
சில்லுப்புரட்சி செய்த நாயகனே!
பூனைக்குட்டிகளுக்காய் எழுதிய
புலிக்குட்டியே!


நீ கற்றதையும் பெற்றதையும்
உலகினுக்கு வாரி வழங்கிய வள்ளலே!
உன் கனவுத் தொழிற்சாலை மூலம்
பலர் கனவுகளுக்கு உயிரூட்டிய பிரம்மனே!


ஸ்ரீரங்கத்து தேவதைகளின் தேவனே- ரங்கராஜனே!
என் இனிய இயந்திரத்தின் இந்திரனே!
அடுத்த நூற்றாண்டின் மாபெரும் சிற்பியே!
அப்பா நீ அனைவருக்கும்
அன்பான அப்பாவே!

ஒரு விஞ்ஞான பறவையே!
மனிதன் வாழ்வு ஒரு நீர்க் குமிழி தான் என நிரூபிக்க
மேலும் இறைவன் இருக்கிறாரா என ஆராய
வாசகர்களாகிய எங்களின்
கற்பனைக்கும் அப்பால் நீ சென்றாயோ!

இறைவன் எடுத்த அவதாரங்களோ
பத்து தான் ஆனால்
நீ எடுத்தவையோ ஏராளம் ஏராளம்!

தமிழர்களாகிய எங்களின்
தாழ் பணிந்த வணக்கங்களை
உன் பாதார விந்தத்தில் சமர்ப்பிக்கிறோம்!

அவை எல்லாம் ஏற்றுக்கொள்!
சாகா வரம் பெற்ற சாதகப் பட்சியே
என்றென்றும் நீ ஒரு சரித்திர நாயகனே!



பிரசன்னா சாந்தி
டுபாய்
இணைப்பு: Nila

01 Mar 2008


Copyright - 2005-2007 All Rights Reserved. lankasripoems.com


Dear viewers and readers,

        This  is one of my published poems  in Tamil.  I wish who ever knows my language can read this and  send their feed backs. Thanks a lot
           

Regards,
prasanna

LEAD, KINDLY LIGHT. LOVE IS GOD, LOVE IS OCEAN, " Love Is Eternal. " LIVE TO LOVE TO LIVE.

Post Reply

Return to “Poetry and Literature”

Who is online

Users browsing this forum: No registered users and 16 guests