A pure devotee's worship

Share your stories, poems, plays, and show your creative side to the world.

Moderators: eye_of_tiger, shalimar123

Post Reply
User avatar
Jayashree Ravi
Posts: 165
Joined: Thu Sep 12, 2013 9:32 pm

A pure devotee's worship

Post by Jayashree Ravi » Mon Apr 18, 2016 9:12 pm

இறைவா, உன்னை நான் என் மனதால்
அனுதினம் மறவாது பூஜிக்கிறேன்..
நான் பூண்ட அஹிம்சை என்னும் விரதமே
உனக்கு நான் செய்யும் அபிஷேகம்
ஜீவர்களுக்கு நான் செய்யும் தொண்டே
உனக்கு நான் அணிவிக்கும் மேலாடை
ஒருபோதும் சிலிர்க்காது நான் வகுக்கும் நாவடக்கம்
அதுவே நான் உனக்கு சாற்றிய மாலை
எளியோரைக்கண்டு பீறிடும் என் இரக்கம்
அதுவே உனக்கு நான் இடும் சந்தானம்
புறஞ்சொல்லுவோரிடமும் நான் கூறும் உண்மை
அதுவே உனக்கு நான் சாற்றிய பூமாலை
ஜீவர்களுள் எப்போதும் நான் தேடும் சத்சங்கம்
அதுவே உனக்கு நான் செய்த நைவேத்யம்
வாயில்லா ஜீவன்களுக்கு நான் காட்டும் பரிவு
அதுவே உனக்கு நான் செய்த ஆரத்தி
இதுவே நான் உனக்கு அனுதினம் செய்யும் பூஜை
தவறாமல் சிறியேனின் பூஜையை ஏற்று
உன்னைத்தவிர என்மதி வேறொன்றும் நாடா வரம் கொடு

O god! With my heart
I pray to you everyday without fail
The austerity of ahimsa that I am bonded to
That will be my abhisheka to you
The service I render to fellow humans
Is the cloth I wrap you with
The humility that I carry on, without swaying
That will be my jewels to you
The mercy that I feel to those who are unfortunate
That will be my sandalpaste to you
The truth that I convey even to those who will speak ill of me
That will be my garland to you
The company of meritorious that I seek among men
That will be my offering of food to you
The affection that I bestow on those animals that cant speak
That will be my aarathi to you
This is the puja that I do you each day
Kindly accept my puja without fail
And bless me that I do not think of anything other than you!
Srimathe Ramanujaya Namaha

Post Reply

Return to “Poetry and Literature”

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests